பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நான்கு டாஸ்ககுகளை போட்டியாளர்கள் நிறைவு செய்துள்ள நிலையில் தர்ஷன் இந்த டாஸ்கில் முதல் இடத்தில இருக்கிறார்.
கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட டாஸ்கில் சுதப்பிய கவின் இரண்டு நாட்களாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை பெற போட்டியாளர்கள் கடுமையாக போராடி வருவதால் இனி வரும் நாட்களில் டாஸ்குகள் கடுமையாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இருப்பினும் கடந்த இரண்டு சீசன்களில் நடத்தப்பட்ட பினாலே டாஸ்க் போல தற்போது நடத்தப்பட்டு வரும் பினாலே டாஸ்க் இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
https://twitter.com/i/status/1174571483894558720
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்கின் போது லாஸ்லியாவை, சாண்டி தெரியாமல் தள்ளி விடுவது போல தெரிகிறது.
இதனால் பதறி போன கவின், சாண்டியிடம் வாக்கு வாதம் செய்கிறார்.
ஏற்கனவே கவின் லாஸ்லியா விஷயத்தில் சாண்டியிடம் கொஞ்சம் மனம் நோகும்படி நடந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.