சாண்டி

கவின் பற்றி அன்றே சொன்ன அவரது நண்பர்.! வைரலாகும் வீடியோ.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த சில நாட்களாக கவின், லாஸ்லியாவை விட்டு விட்டு ஷெரினிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். இதனால் கவின் இனி லாஸ்லியா பக்கம் திரும்ப மாட்டார் என்று பலரும் நினைத்து வந்தனர்.

ஆனால், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஒரு டாஸ்கின் போது லாஸலியாவை சாண்டி தள்ளிவிட , கடுப்பான கவின், சாண்டியிடம் வாக்கு வாதம் செய்தார்.இந்த ப்ரோமோவை கண்ட பலரும் லாஸ்லியாவிற்காக, கவினுக்கு உண்மையாக இருக்கும் சாண்டியையே கவின் இப்படி பேசுகிறாரே என்று புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு எதாவது நேர்ந்தால் கண்டிப்பாக கவின் கொதித்து எழுவார் என்று கவினின் நண்பரும் நடிகருமான ராஜு ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

லாஸ்லியாவிற்காக கவின் இப்படி சாண்டியிடம் மல்லு கட்டுவது முதல் முறை அல்ல. லாஸ்லியாவின் குடும்பம் வீட்டிற்குள் வந்ததும் அவர்கள் லாஸ்லியாவிடம் அழுது புலம்பியதை பார்த்த கவின் குற்ற உணர்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறினார்.

https://twitter.com/imrajkumarkanna/status/1174565221970534400

மிகவும் சோகத்துடன் இருந்த அவரை சமாதானம் செய்ய சாண்டி கவினை கலாய்த்தார். தனது மனநிலை தெரிந்தும் சாண்டி தன்னை கலாய்ப்பதாக கவின் தர்ஷனிடம் கூறி புலம்பினார்.

உனது மனநிலையை மாற்றவே தான் கலாய்த்ததாக சாண்டி கூறினாலும் கவின் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் கோபமடைந்த சாண்டி அங்கிருந்து எழுந்து பாத்ரூமிற்குள் சென்றுவிட்டார். அதன் பின்னர் கூட சாண்டி பாத் ரூமில் அழுதுவிட்டு கவினை சமாதானம் செய்தார்.

அதே போல லாஸ்லியா கேப்டனாக இருக்கும் போது சாண்டி ஏதோ லாஸ்லியாவை கலாய்க்க, லாஸ்லியா கோபித்து எழுந்து சென்றார்.

அப்போதும் கவின், சாண்டியிடம் கொஞ்சம் முரணாக பேசினார் என்பதும் குறிப்பிடதக்கது.

நேற்றய தங்க முட்டை டாஸ்கில் வென்றது யார்.! இன்றய ப்ரோமோவில் சிக்கிய ஆதாரம் இதோ.!

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …