செய்திகள்

News

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்..!

தடை தொடர்கிறது

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத் தளங்களை கண் காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் …

Read More »

150 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கவுள்ள இராணுவம்..!

கிளிநொச்சி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி இன்று (18) விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த காணிகளில் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இன்று காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு …

Read More »

யுத்தத்தில் சரணடைந்த 2994 புலிகள் படுகொலை; கோத்தா வாக்கு மூலம்..!

கோட்டாபய

யுத்தத்தின் போது, சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. சரணடைந்தோர் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவிப்புக்கும், தகவலறியும் சட்டத்தின் ஊடாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் தகவலுக்கு அமையவும் 2,994 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எதுவித தகவலும் இல்லை. இறுதி யுத்தத்தின் போது ராணுவத்திடம் 13 ஆயிரத்து 784 …

Read More »

ராஜிவ் வழக்கில் 7 பேரையும் விடுவிக்கக்கோரி பிரதமருக்கு ரவிச்சந்திரன் கடிதம்!

பிரதமர் மோடி

கடந்த 28 ஆண்டுகளை சிறையிலேயே தாங்கள் கழித்து விட்டதை கருத்தில் கொண்டு, எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கக் கோரி, எழுவரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தாங்கள் எழுவரும், ஒருநாள் வெளிச்சத்தை காண்போம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் …

Read More »

நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

கச்சத்தீவு

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கடல்ராஜா, ரமேஷ், செந்தில் ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இதையடுத்து காங்கேசம்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை …

Read More »

சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு

சீமான்

தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் என்றும் அதுவே அவருக்கு மிகப்பெரிய தண்டனையாக அமையும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48வது ஆண்டுவிழாவையொட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்.சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கடம்பூர் ராஜு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு இதனை தெரிவித்துள்ளார். …

Read More »

பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தானது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தானது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற மிகச்சிறந்த புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டது என்றும், வரும் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றலாம் என்றும் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நீண்ட காலமாக …

Read More »

48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக

அதிமுக

அதிமுக என்ற சொல்லிற்கு இருக்கும் பலம் அளவற்றது என்று கூறினால் மிகையாகாது. இத்தகைய அதிமுக எப்படி உருவானது ? 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் சாதனைப் பயணத்தை சற்றே திரும்பி பார்க்கலாம். தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ம் தேதி, எம்.ஜி.ஆரால் புதுக்கட்சி தொடங்கப்பட்டது. அந்த கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை சூட்டினார் எம்.ஜி.ஆர். புதிய இயக்கத்தின் பெயரையும் …

Read More »

பொருளாதாரத்தை அழித்து விடுவோம் – துருக்கியை மிரட்டும் அமெரிக்கா

செனட் சபை

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி அரசு மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அழிக்கப்போவதாக சூளுரைத்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்து இனப் போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள் தங்கள் நாட்டிலும், எல்லையிலும் இருப்பதை துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் ஆபத்தாக கருதுவதே …

Read More »

யாழ் விமான நிலைய திறப்பு விழா 17ம் திகதி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17ம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் சென்னைக்கான விமான சேவைகள் எதிர்வரும் 27ம் திகதி முதல் வழமையான பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 17ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் …

Read More »