செய்திகள்

News

தேச பிதா காந்தி இல்லையா… மோடியா??

காந்தி

இந்தியாவின் தந்தையே மோடிதான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியிலான சந்திப்பு நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது மோடி குறித்து டிரம்ப் பின்வருமாறு பேசினார், மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. இந்தியாவுடன் வர்த்தக நீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் துவங்க உள்ளன, மோடி …

Read More »

KTM நிறுவனத்தின் சக்திவாய்ந்த Duke பைக் வெளியீடு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் KTM நிறுவனம் புதிய 790 Duke பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது KTM Duke வரிசை பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் Duke வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக 790 Duke பைக்கை KTM நிறுவனம் களமிறக்கி உள்ளது. இந்தியாவில் KTM நிறுவனம் அறிமுகம் செய்யும் சக்திவாய்ந்த பைக் மாடல் என்பதுடன், முதல் இரட்டை சிலிண்டர் …

Read More »

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை மனு!

கனிமொழி

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் கடந்த மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், வேட்புமனுவில் சில தகவல்களை மறைத்ததாகவும் கூறி, அவர் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அப்போதைய …

Read More »

ஸ்லோவாகியா நாட்டில் முதல்முறையாக பெண் ஒருவர் அதிபராக தேர்வு

ஸ்லோவாகியா

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவின் அதிபர் தேர்தல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. லிபரல் கட்சியைச் சேர்ந்த சூசானா கபுட்டோவா அதில் வெற்றி பெற்றதோடு, ஸ்லோவாகியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையையும், குறைந்த வயதில் அதாவது 45 வயதில் அதிபர் ஆனவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தனது சொந்த ஊரான பெஸிநாய்க் பகுதியில் நிலத்தில் நச்சுப்பொருட்கள் நிரப்பப்படுவதை எதிர்த்து மிகப் பெரும் சூழலியல் போராட்டத்தை …

Read More »

உலகம் முழுவதும் ஞாபக மறதி நோயால் 40 லட்சம் பேர் பாதிப்பு

உலக ஞாபக மறதி நோய்

உலக ஞாபக மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுவோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றை காலக்கட்டத்தில் உணவு சமைப்பது முதல், சிறு சிறு கூட்டல் கணக்கு போடுவது வரை எல்லாமே இயந்திர வாழ்க்கையாகவிட்டது. மனிதன், தன் மூளைக்கு வேலை கொடுப்பது 5 முதல் 10 விழுக்காடு மட்டுமே என்று சொல்வார்கள். மூளைக்கு வேலையே கொடுக்காமல், …

Read More »

பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் கைது..

பாலியல்

சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஷாஜஹான்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை வெளியிட்டவுடன் அந்த மாணவி மாயமானார். பின்பு அந்த மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். …

Read More »

அமெரிக்க ராணுவத்தில் இசைத்த இந்திய தேசிய கீதம்..

அமெரிக்க

இந்திய மற்றும் அமெரிக்கா ராணுவ கூட்டு பயிற்சி நிறைவு நாளில், ராணுவ இசைக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆம் தேதி அமெரிக்காவின் லூயிஸ் மெக்கார்ட் பயிற்சி மையத்தில், அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி துவங்கியது. இந்த பயிற்சி நேற்று நிறைவு பெற்றதன் நிலையில், அமெரிக்கா ராணுவ இசைக்குழுவினர் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த …

Read More »

சுபஸ்ரீயின் பெற்றோருக்கு 5 லட்சம் வழங்கிய ஸ்டாலின்.. ஆறுதலா? அரசியலா?

சுபஸ்ரீ பெற்றோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அறக்கட்டளையிலிருந்து 5 லட்சம் நிதியுதவியாக வழங்கியுள்ளார். சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பல்லாவரம் அருகே மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது பேனர் விழுந்தது. பேனர் விழுந்ததில் தடுமாறி கிழே விழுந்த சுபஸ்ரீ மீது அவருக்கு பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து …

Read More »

காமராஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்குகிறது தமிழக அரசு.. பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பதை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இது காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் திட்டங்களை தவிடுபொடியாக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நடிகர் …

Read More »

நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அதிமுக எம்.பி.க்கள்

நாடாளுமன்ற

நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு துறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுக்களை நியமித்துள்ளது. நீர்வளத்துறைக்கு மக்களவை உறுப்பினர்கள் 21பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10பேர் அடங்கிய நிலைக்குழுவை அமைத்துள்ளது. பாஜகவின் சஞ்சய் ஜெய்ஸ்வால் என்பவரைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.

Read More »