செய்திகள்

News

கொக்குவில் தொடரூந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை

கொக்குவில்

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொடரூந்து நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 3 பேர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாண காவற்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த தொடரூந்து நிலைய அதிபர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடரூந்து நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் ஆவா என்று அடையாளப்படுகின்ற வாள் வெட்டுக் …

Read More »

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

இருவர் கைது

மொரவெவ – பன்குளம் கோவில் அருகில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதானதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவர்கள் ஜயந்திபுர மற்றும் மஹதிவுல்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவ, 26 மற்றும் 32 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

Read More »

ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

எந்த நாட்டில் தெரியுமா

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. அதேபோல் உலகிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் டேட்டா கட்டணமும் மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பின்னர் இலவச டேட்டா முதல் …

Read More »

பாடசாலை பாதுகாப்பிற்காக பெற்றோரை பயன்படுத்த வேண்டாம்

பாடசாலை

பாடசாலைகளில் இடம்பெறும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளில் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பெற்றோர்களை அதில் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட …

Read More »

அமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி

அமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி

எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. அமைச்சர் மனோ கணேஷன் இதனை தெரிவித்துள்ளார். வழமையாக அமைச்சரவை கூட்டம் செவ்வாய்கிழமைகளில் இடம்பெறும். எனினும் கடந்த 11 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தம்மை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுமானால் தாம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் …

Read More »

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவனுடன் கோவை இளைஞன் தொடர்பா?

இலங்கை

கோவையில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிரடி சோதனை செய்து வரும் நிலையில் இந்த சோதனையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவனுடன் கோவை இளைஞன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடி விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவையின் உக்கடம் என்ற பகுதியை சேர்ந்த முகமது அசாருதின் என்பவனுக்கும் இலங்கை குண்டுவெடிப்பை நடத்திய ஸக்ரான் …

Read More »

20 வருடங்கள் கழித்து புயலின் பிடியில் குஜராத்? – ”வாயு” புயல் ஒரு பார்வை

குஜராத்

அரபிக்கடலில் மையம் கொண்ட வாயு புயலானது நாளை குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெராவலிலிருந்து துவாரகாவுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது புயலின் வேகம் மணி நேரத்திற்கு 150 கி.மீ முதல் 180கி.மீ வரை இருக்கிறது. இது கரையை கடக்கும்போது …

Read More »

குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துள்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் பெரும்பாலான நீதித்துறை சார்ந்தவர்கள் மோசடி தொடர்புடையவர்கள் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டு நீதிதுறையை அவமதிப்புக்குள்ளாக்கினார் என அவர் மீது குற்றம் …

Read More »

ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு

பயங்கரவாத அபாயம்

இலங்கையில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இதன்போது நடப்பு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து மீண்டும் வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆரயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூர் நோக்கி இன்று மதியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

குடும்பத்தார் கண் முன்னர் நடந்த கொடூர பலாத்காரம்!

கண்

உத்திரபிரதேச மாநிலத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு ஏற்பட்ட தகறாரில் சிறுமி இருவர் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் வசித்து வந்த சிறுமியின் குடும்பம் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு முடிவு செய்தனர். ஆனால், இதை பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர்க்கவே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மாலை நேரத்தில் வீட்டில் இருந்த சிறுமியை இழுத்துக்கொண்டு போய் குடும்பத்தினர் கண் முன்னிலையிலேயே அந்த …

Read More »