செய்திகள்

News

விசேட அறிக்கை அடுத்த வாரத்தில்

வெடி குண்டு

ஏப்ரல் 21 இல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் அவரிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இந்தக் குழு தனது இரண்டு இடைக்கால அறிக்கைகளை …

Read More »

மாலத்தீவை அடுத்து இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பகல் 12.05 …

Read More »

இளைஞரின் நாக்கைக் கடித்து துப்பிய பெண் டாக்டர் !

இளைஞரின்

தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் மருத்துவர் வேலை செய்துவந்தார். அவரை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவனிடமிருந்து தப்பிச் செல்ல நினைத்த மருத்துவர் அவனது நாக்கைக் கடித்து துப்பிய தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பெண்மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் பணிக்களைப்பில் அங்குள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு வாலிபர் , அவரை …

Read More »

தாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்

தாய் - தந்தை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்துவந்தவர் தினேஷ்குமார்(24). இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அந்தக் கடையை நடத்திவந்தவர் முருகையன் என்பவர் ஆவார். தினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார். இதையடுத்து முருகையனுக்கும், தினேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் …

Read More »

இந்தியப் பிரதமாின் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கான செய்தி

இலங்கை விஜயம்

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை வழங்குவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும், மாலைதீவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் …

Read More »

உந்துருளியில் பயணித்த இளைஞா் பேருந்தில் மோதி பலி

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவா் உயிரிழந்துள்ளாா். நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரிகின்ற குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் …

Read More »

முஸ்லிம் அமைச்சா்கள் பதவி விலகியமை குறித்த வா்த்தமானி அறிவித்தல் வெளியீடு

வர்த்தமானி அறிவித்தல்

அனைத்து முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். அத்துடன், பைசல் காஷிம், மொஹமட் ஹரீஸ், அமீர் அலி மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார் என வர்த்தமானி அறிவித்தலில் …

Read More »

நடிகை ரோஜா துணை முதல்வராகிறார் ?

நடிகை ரோஜா

ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை நியமனம் செய்யப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்பொழுது 5 துணைமுதல்வர்களில் ஒருவராக நடிகை ரோஜா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றதில் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் 25 அமைச்சர்களும் 5 துணை முதலமைச்சர்களும் செயல்படுவார்கள் என்றும், இவர்களின் பதவி பிரமாணம் வரும் சனிக்கிழமை …

Read More »

இலங்கையில் சிறுவர் பாலியல் முறைக்கேடுகள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

இலங்கையில்

இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் சிறுவர் பாலியல் முறைக்கேடுகள் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார்கள் பாலியல் முறைக்கேடுகளுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாப்பதற்கான கொள்கைகள், இலங்கையில் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் அமுலாக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Read More »

மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம் – வேளச்சேரியில் ரெய்டில் சிக்கிய இருவர்

மசாஜ் பார்லர்

வேளச்சேரி பேபி நகரில் வட இந்திய பெண்களைக் கொண்டு விபச்சாரத் தொழில் நடத்தி வந்த இரண்டு ஆண்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையின் மையப்பகுதிகளில் வீடுகளிலும், மசாஜ் பார்லர் என்ற பெயரிலும் விபச்சாரத் தொழில் மறைமுகமாக ஏகபோகமாக நடந்து கொண்டுதான் வருகிறது. இந்த தொழிலில் வட இந்திய பெண்களே அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆன்லைன் மூலமாக ஆட்களைக் கவர்ந்து அதன் பின்னர் அவர்களுக்குத் தேவையான பெண்களை அளித்தும் இந்த தொழில் அதிகளவில் …

Read More »