கச்சத்தீவு அருகே 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது ராமேஸ்வரம் அருகில் உள்ள கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகில் சென்று மீன்பிடிப்பது வழக்கம். அப்போது தவறுதலாக இலங்கை எல்லைக்குள் சென்றுவிடுவது உண்டு. மேலும் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். சில நேரங்களில் படகுகளை சேதப்படுத்துவதோடு கைதும் செய்கிறார்கள். இன்று ஏராளமான மீனவர்கள் கச்சத்தீவு அருகே …
Read More »வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை
இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர். இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடந்த …
Read More »சூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு
பூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. 1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும். ஐரோப்பாவின் ‘தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா’ …
Read More »தேனியின் தோனியா ஓபிஎஸ் மகன்? மீம்ஸ்கள்
தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக தேனி தொகுதி மாறியுள்ளது. துணண முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரகுமார் போட்டியிடுவதால் முதலில் முக்கியமான தொகுதியாக இருந்த தேனி, அமமுகவில் தங்கதமிழ்செல்வனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது திமுக-காங்கிரஸ் என்ற வலுவான கூட்டணியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தாலும் இந்த தொகுதிக்கு இவர் அறிமுகமில்லாதவர் என்பதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. …
Read More »நரேந்திர மோடி, அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது
பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். “உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால், உண்மையில் நமது பொருளாதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் உள்ளது.இருந்தாலும், பிரதமர் மோடி ஏன் 5-ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார் என்பது புரியவில்லை. பிரதமருக்கு பொருளாதாரம் …
Read More »உதயசூரியனில் மதிமுக வேட்பாளர்!
தமிழகத்தில் சுமார் 20 வருடங்கள் அரசியல் கட்சி நடத்தி வரும் வைகோ, திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்டது குறித்து மதிமுகவினர்களே விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ அறிவித்திருந்தார் இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஒருசில மாவட்டங்களில் மட்டுமே …
Read More »முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ் – சிரியா ஜனநாயகப் படைகள்
சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரியா ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது. ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரியா ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி வருகிறார்கள். சிரியா மற்றும் இராக்கில் 88,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பளவை ஐஎஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தனது …
Read More »தேமுதிக வேட்பாளர் சுதீஷின் சொத்து மதிப்பு
அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின் போது சுதீஷின் சொத்து மதிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதவாது, கடந்த 5 ஆண்டுகளில் சுதீஷின் அசையும் சொத்துகளின் மதிப்பு 336% வரை அதிகரித்துள்ளது. அதேபோல் மொத்த சொத்து 77% அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் சேலம் மக்களவை தேர்தலில் தேமுதிக …
Read More »அவ்வளவுதானா உங்க பவர்; பூசி மொழிகிய தமிழிசை
அடுத்த மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பிரச்சாரத்தையும் தீவிரவாகமாக துவங்கியுள்ளது. பாஜக தலைமை மார்ச் 21 முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால், இதற்கு முன்னரே எச்.ராஜாவும், வானதி சீனிவாசனும் இதர்கு முன்னரே வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டனர். இது பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் தமிழிசை எச்.ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தார் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் …
Read More »கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிரடி !
கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான நிலையாக நின்று சோதனை செய்யும் குழுவினர் குளித்தலை அருகே சிவாயம் பிரிவு ரோடு பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ராமநாதபுரத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற வேனில் சோதனையிட்டனர். அப்போது வாளவந்தியை சேர்ந்த டிரைவர் குமார் என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.3,35,000 பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குளித்தலை சட்டமன்றத்தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.எம்.லியாத் …
Read More »