செய்திகள்

News

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்கிறார்

இலங்கை

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, 8வது புதிய அதிபராகத் இன்று பதவியேற்க உள்ளார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றார். பதிவான வாக்குகளில் கோத்தபய ராஜபக்ச 52 விழுக்காடு வாக்குகளும், சஜித் பிரேமதாசா 42 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் 13 …

Read More »

கோத்தபய ராஜபக்ச முன்னிலை…! இறுதிமுடிவுகள் மாலை வெளியாகும் என்று தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கோத்தபய ராஜபக்ச முன்னிலை

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், கோத்தபய ராஜபக்ச முன்னிலை பெற்றுள்ளார். இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய …

Read More »

தென் கொரியாவில் ரத்த ஆறாக காட்சியளித்த இம்ஜின் ஆறு

இம்ஜின் ஆறு

தென் கொரியாவில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பன்றிகளால், ரத்த ஆறு உருவாகி இணையத்தில் பரவலாக பேசபட்டது, என்னதான் நடந்தது? ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் சமீபகாலமாகத் தென் கொரியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய் பன்றிகளை மிகவும் எளிதாகத் தாக்கி, பிற விலங்குகளுக்கும் பரவும் தன்மைகொண்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகள் இறுதியில் இறப்பை மட்டுமே சந்தித்து …

Read More »

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்ச பின்னடைவு

சஜித்

இலங்கை அதிபர் தேர்தலில்: புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச சுமார் 1.34 லட்சம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார் இலங்கையில் நேற்று காலை 7 மணி முதல் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நேற்றிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன முதல்கட்ட …

Read More »

கீழே விழுந்து நொறுங்கியது போர் விமானம்..

விமானம்

கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போர் விமானங்கள் கட்டுபாடை இழந்து கீழே விழுந்து நொறுங்கும் சம்பவங்கள் இந்தியாவில் ஆங்காங்கே சமீப காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் கோவாவில் மிக் 29 கே என்ற போர் விமானத்தில் 2 விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. எனினும் இந்த விபத்தில் …

Read More »

என்ன வெற்றிடம்? அதெல்லாம் எப்பவோ ஃபில் பண்ணியாச்சு: வைகோ!

பதவி கேட்டு ஒருத்தன் வரமாட்டான்... பேக் அடித்த திமுக: எம்.பி ஆகும் வைகோ!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என கூறியுள்ளார். தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தி தெரிவித்த நிலையில், இதனை மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கம்ல்ஹாசனும் இதை ஏற்றுக்கொண்டார். ஆனால், மற்ற அரசியல் கட்சியினர் இதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிடத்தை நிறப்பிவிட்டார் எனவும், திமுகவினர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிறப்பிவிட்டார் எனவும் தங்களது பங்குக்கு …

Read More »

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்: தமிழக அரசு

தமிழக அரசு

தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண்குமார், தென்காசி ஆட்சியராக ஜிகே. அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், செங்கல்பட்டு ஆட்சியராக …

Read More »

மகாராஷ்டிரா: சிவசேனா, காங். கூட்டணி தலைவர்கள் ஆளுநருடன் இன்று சந்திப்பு

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர். 288 உறுப்பினர்கள்ளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 105 இடங்களிலும். சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. எனினும் முதல்வர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியை முறித்துக் கொண்டன. ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராததால் குடியரசுத் தலைவர் ஆட்சி …

Read More »

இந்தியா கேட்டில் அபாயம்..

இந்தியா

டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய நிலையை எட்டியுள்ளது. சமீப நாட்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய அளவு 460-ஐ எட்டியுள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையும் பாருங்க …

Read More »

மதிக்காத ஸ்டாலின்: ரஜினியுடன் அரசியல் களத்தில் அழகிரி?

அழகிரி

முக அழகிரி ரஜினியுடன் இணைந்து தமிழக அரசியலில் இறங்குவார் என எதிர்ப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். கருணாநிதி மறைவின் போது, திமுகவில் இணைவதற்காக பல விஷயங்களை செய்தார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இதை எதையும் கண்டுக்கொள்ளவில்லை. அதன்பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் போட்டியிடுவார் தனது அரசியல் ஆதிக்கத்தை காண்பிப்பார் என்று எல்லாம் பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதன் பின்னர் அழகிரி குறித்து பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. …

Read More »