இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்கிறார்

0
21
இலங்கை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, 8வது புதிய அதிபராகத் இன்று பதவியேற்க உள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றார்.

பதிவான வாக்குகளில் கோத்தபய ராஜபக்ச 52 விழுக்காடு வாக்குகளும், சஜித் பிரேமதாசா 42 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனால் 13 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச அநுராதபுரத்தில் நடைபெறும் விழாவில், 8வது புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

ஆளுங்கட்சி வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகக் கலைந்துவிடும்.

இதனால் கோத்தபய அதிபராகப் பதவியேற்றதும் புதிய அமைச்சரவையை நியமிப்பார். புதிய பிரதமராகத் தினேஷ் குணவர்த்தனேயை நியமிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்