டி20 போட்டியில் சேஸிங்-கின் போது சதம் அடித்த முதல் கேட்பன் என்ற சாதனையை படைத்தார் பரஸ் கத்கா.
சிங்கப்பூர்-நேபால்-ஜிம்பாவே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று சிங்கப்பூர்-நேபால் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய சிங்கப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை அடித்தது. 152 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நேபால் அணி 16 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
நேபால் அணியின் கேப்டன் பரஸ் கத்கா 52 பந்துகளில் 106 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த சதம் மூலம் டி20 தொடரில் சதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் டி20 போட்டியில் சேஸிங்-கின் போது சதம் அடித்த முதல் கேட்பன் என்ற சாதனையையும் படைத்தார் பரஸ் கத்கா.