உணவுச்சந்தையில் ஃப்ளிப்கார்ட்- Farmermart காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யும்!
ஃப்ளிப்கார்ட் இந்தியாவில் சில்லரை வியாபாரிகள், உள்ளூர் விவசாயிகளுடன் தற்போது ஒப்பந்தமிடும் பணியையும் செய்து வருகிறது.
ஃப்ளிப்கார்ட் புதிதாக உணவுச் சந்தைக்கான Farmermart நிறுவனத்தை காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் தளமாக உருவாக்கியுள்ளது.
அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களுக்குமே இந்திய சந்தை மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை அளித்து வருகிறது. எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபேஷன் உலகின் இரு நிறுவனங்களும் நல்ல வணிக லாபம் கண்டபோதும் உணவுத்துறையில் யார் முந்துவது என்ற போட்டி இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்து வருகிறது.
ஃப்ளிப்கார்ட் இந்திய உணவுச்சந்தையைக் கைப்பற்ற வால்மார்ட் நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இந்திய சட்டப்படி தேவைப்படும் உனவு சார்ந்த லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் செய்யப்பட்டு வருகின்றன.
அமேசானைவிட வால்மார்ட் நிறுவனம் அமெரிக்காவில் உணவுச்சந்தையில் வெற்றி பெற்ற அனுபவம் கொண்டதாகும். இதனால் தனது இந்திய கிளையான ஃப்ளிப்கார்ட்டை நிச்சயம் முன்னேற்றும் என்ற கருத்தும் வர்த்தகவியலாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ஃப்ளிப்கார்ட் இந்தியாவில் சில்லரை வியாபாரிகள், உள்ளூர் விவசாயிகளுடன் தற்போது ஒப்பந்தமிடும் பணியையும் செய்து வருகிறது.
இதையும் பாருங்க :
பிக்பாஸ் வீட்டில் எனக்கும் முகினுக்கும் நடந்ததை சொன்னால்…!? – ஆவேசமாக பேசிய மீரா! – வீடியோ!
பொருளாதாரத்தை அழித்து விடுவோம் – துருக்கியை மிரட்டும் அமெரிக்கா