உடலுக்கு நலம்தரும் சில பழங்களை பற்றி பார்ப்போம்…!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பலாப்பழம்: பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும்.

அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

இலந்தைப் பழம்: பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும்.

அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

திராட்சை: உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

பப்பாளிப் பழம்: யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

வாழைப்பழம்: மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

வில்வப் பழம்: பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

அரசம் பழம்: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

About அருள்

Check Also

மருத்துவ குணங்கள்

மருத்துவ குணங்கள் கொண்ட கோவைக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!15Sharesகோவைக்காயின் உவர்ப்பான சிவை வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிலருக்குச் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் …