கண்ணீரே

கண்ணீரே காணிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

” கண்ணீரே காணிக்கை…..”

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
வாழ்க்கையின் போர்க்களத்தில்
உயிரழித்ததை நீ மறந்தாயோ……

தாய்க்குப் பிள்ளை இல்லை
பிள்ளைக்குத் தாய் இல்லை
பிள்ளை பசியால் அழுதிடவே
வற்றிய முலையில் பால் உண்டோ…….

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
ஆணிவேர்விட்டு ஒன்றாய்க்கூடி
ஆனந்தமாய் வாழ்ந்ததையே
அழித்ததையே நீ அறியாயோ……

உதிரம் சிந்திடவே அவலக் குரலேடு
எட்டுத்திக்கிலும் சிதறியோடியே
எம் உறவுகளே நீ எங்கே நீ எங்கே
எங்கேயும் கேட்கவில்லையோ…

ஐயோ அம்மா ஐயோ அம்மா என்றே
இன்னும் காதில் கேட்கின்றதே
கடைசிக் குரலிலே கதறும் வேளையிலும்
மண்ணில் புதைத்தாயே மனிதனோ நீ……

காலங்காலமாக எம் மனதில்
தொடர்கின்ற தொடர்கதையாய்
தொலைத்த உறவுகளை நாமும்
தேட முடியுமா மறுபடியும் சொல்…….

காலம் பல கடந்தாலும் என்றும்
கண்ணீரை காணிக்கையாக
கவலையோடு செலுத்தினாலும்
உங்கள் ஆத்மா சாந்தி அடையுமோ……

என் இதய வேதனைகளை
வரிகளால் இங்கே கரைக்கின்றேன்
கடவுளே அங்கே என்றாலும்
நித்திய ஜீவனை கொடுப்பாயா……..

வீரத் தமிழனும் இங்கே அனாதையாய்
துரோகத்தால் விழுந்துவிடவே இன்று
சுயநலத்தோடு மனிதர்கள் பலபேர்
துக்கம் துடைப்பது சரியோ……..

நீர்வேலி,
கவிஞர் த. வினோத்.
யாழ்ப்பாணம்.

மூத்த குடியே…உனக்கு முடிவுரையா..!?

பெருயுகம் இழந்த பேரினம்……

About அருள்

Check Also

உன் நினைவிலே நான்

உன் நினைவிலே நான்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!132Shares” உன் நினைவிலே நான்….” உன்னுடன் சேர்ந்தே உயிர் வாழ்ந்திடவே உனக்காகவே நானும் உயிர் வாழ்கின்றேனே…… உன்னை …