கொடைக்கானல்

கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகள் இயக்கத்தடை – உயர்நீதிமன்றம் அதிரடி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கொடைக்கானல் ஏரியில் தனியார் அமைப்பு மற்றும் தனியாருக்கு சொந்தமான படகுகள் இயக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானல் ஏரி அருகே பத்தாயிரம் சதுர அடி பரப்பளவுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டு படகு குழாம், கடைகள் உள்ளிட்டவை நடத்தப்படுவதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது.

மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக தற்போதும் படகு குழாம் இயக்கப்படுவது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு அம்பலப்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த மனுவில் கொடைக்கானல் படகு குழாமில் 150 படகுகள் இயக்கப்படுவதாகவும், ஆனால் அதன் முழு வருவாயை கொடைக்கானல் நகராட்சிக்கு காட்டாமல் முறைகேடு நடப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, கொடைக்கானல் ஏரியில் தனியார் படகு போக்குவரத்தை நிறுத்தி போட் கிளப்பை பூட்டி சீல் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதையும் பாருங்க :

சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மலர்ந்த மலர்கள்

மூன்று வேளை சோற்றுக்காக வெடிகுண்டு மிரட்டல்: கைதானவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

செயலிழந்த உடல் உறுப்புகள். மரணப்படுக்கையில் பறவை முனியம்மா

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …