விஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் ? வருவாரா ?- எஸ் ஏ சி பதில் !

0
4
விஜய்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிகர் என்பதைத் தாண்டி இப்போது அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கும் நபராக மாறி வருகிறார்.

ரஜினியைப் போல ஒவ்வொரு பட ரிலிஸின் போது அரசியல் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் அவர் அரசியலுக்கு வரவேண்டும் எனவும் அவர் அரசியல் ஆசையில்தான் இப்படி பேசிவருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அவரின் தந்தையும் சினிமா கேரியரை செதுக்கியவருமான எஸ் ஏ சந்திரசேகர் அரசியல் வருகைக் குறித்து பேசியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வியின்போது ‘என்றைக்காவது விஜய் அரசியலுக்கு வருவேன் என சொல்லியுள்ளாரா?.

அவர் எங்கோ ஒரு மேடையில் பேசிய பேச்சுகளை வைத்து கற்பனை செய்து கொண்டால் நான் என்ன செய்வது?

அவர் ஒரு நல்ல நடிகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏன் அவர்மேல் இப்படி கல்லடித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை.

விஜய் முதல்வராக வர வேண்டும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற கேள்வியை என்னிடம் கேட்டால் எப்படி பதில் சொல்வது ? அவர் என்ன சின்ன குழந்தையா ?.

45 வயதாகும் மகனின் மனதில் என்ன இருக்கிறது என்பது எந்த தகப்பனுக்கும் தெரியாது.’ எனக் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்டுள்ள கவின்.. அசிங்கபடுத்தும் மதுமிதா.. ட்விட்டர் பதிவை கண்டு கடுப்பான கவின் ரசிகர்கள்