Tag Archives: News

பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்த ராணுவ தளபதி தீவிரம்

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சரிந்துள்ள பொருளாதாரத்தை உயர்த்த தொழிலதிபர்களை அழைத்து, அந்நாட்டின் ராணுவத் தளபதி விவாதித்துள்ளார் என்ற தகவல்கள், சர்வதேச அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த பரபரப்புக்கு காரணம் என்ன? பாகிஸ்தானின் பொருளாதாரமும் கடும் பாதிப்பில் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. பாகிஸ்தானில் பட்ஜெட் பற்றாக்குறை 8.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் …

Read More »

மருத்துவ கல்வி முதலாமாண்டு மாணவர்கள் தேர்வு

மருத்துவ கல்வி முதலாமாண்டு மாணவர்கள் தேர்வு காலதாமதமாக 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த சிலர் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து, தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஒரு சுற்றறிக்கை அனுப்பினர். அதில் நடப்பு மருத்துவ கல்வி ஆண்டில் படிக்கும் …

Read More »

பழந்தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் கீழடி

கீழடி

பழந்தமிழரின் பெருமையை உலகறியச் செய்துள்ள கீழடியில் இருந்து நாளுக்கு நாள் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இங்கு இதுவரை, மத்திய தொல்லியல் துறை 3 கட்டமும், மாநில அரசு 1 கட்டமும் என, 4 கட்ட அகழ்வாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ள …

Read More »

யுனெஸ்கோ விருது பெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோயில்: சிறப்பு தொகுப்பு

ஸ்ரீரங்கம் திருக்கோயில்

திருவரங்கபட்டினம் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீரங்கம், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரமாகும். ரங்கநாதர் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள ஏழு மதில் சுவர்களையும், ஏழு உலகங்கள் என்று கூறுகின்றனர். இந்த திருத்தலத்தின் 21 கோபுரங்களில் ஒன்றான இராஜகோபுரமானது, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக, 236 அடி உயரத்துடன், 1 லட்சத்து 28 ஆயிரம் டன் எடையை கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இத்திருக்கோவிலானது, யாரால் கட்டப்பட்டது …

Read More »

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி

இந்தியா-தென் ஆப்பிரிக்கா

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் …

Read More »

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின்

கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த 24 …

Read More »

மிகப்பெரிய விமான நிலையத்தைத் தொடங்கியுள்ளது சீனா: China

சீனா: China

உலகத் தரத்திலான புதிய சர்வதேச விமான நிலையம் ஒன்றைச் சீன அரசு அண்மையில் தொடங்கி உள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்தில் ஒரு மைல்கல் முயற்சியாகப் பார்க்கப்படும். உலகின் மிகப் பெரிய ஒற்றை முனைய விமான நிலையம் சீனாவில் தொடங்கப்பட்டு உள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் கடந்த 109 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நான்யன் விமான நிலையம் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருந்து வந்தது. இந்நிலையில், விமானப் போக்குவரத்தை …

Read More »

மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியது

பீகார்

உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் கடந்த வாரம் கனமழை பெய்ததால் பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் கங்கை ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் …

Read More »

வான்வெளியில் புதிய கருந்துளையை கண்டுபிடித்தது நாசா

நாசா

வான்வெளியில் புதிய கருந்துளை ஒன்றை அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது. கருந்துளை என்பது கற்பனைக்கு எட்டாத ஈர்ப்பு விசை கொண்ட அண்ட வெளியின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு கருந்துளையும் பல சூரியக் குடும்பங்களை விழுங்கும் அளவிற்குப் பெரியது எனக் கூறப்படுகிறது. தொலை நோக்கிகள் மூலம் பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை குறித்த ஆய்வை மேற்கொண்ட போது சூரியனின் அளவு கொண்ட புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் …

Read More »

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோடி உரையாற்றுகிறார்

பிரதமர் மோடி

ஐநாவின் 74-வது பொதுசபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐநாவின் 74-வது பொதுச்சபை கூட்டத்தில் இன்று இரவு 8 மணியளவில் உலக தலைவர்களின் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த தகவலும் இருக்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்று பேசுவது இது 2-வது முறையாகும். …

Read More »