பிரதமர் மோடி அறிவித்தது போல் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் இதனை தெரிவித்தார். இதையும் பாருங்க : இலங்கை தமிழகம் இன்றைய ராசிபலன் உலக செய்திகள்
Read More »சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக ஆன்லைனில் மாற்றலாம்
சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக மாற்ற விரும்புபவர்களின் வசதிக்காக, அவற்றை ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி, சர்க்கரைக்கான குடும்ப அட்டையை மாற்ற விரும்புவோர் குடும்ப அட்டையின் நகலை இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இன்று முதல் வரும் 26 ஆம் …
Read More »தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் …
Read More »பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக்கொண்டவர் ஆரவ். தற்போது லாஸ்லியா -கவினுக்கு கிடைத்த வரவேற்பு அந்த சீசனில் ஆரவ்-ஓவியாவிற்கு கிடைத்தது. ஆரவும்-ஓவியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என இருவரும் சொல்லிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சைத்தான், ஓ கே கண்மணி ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரவ் தோற்றமளித்தார். ஆனால் தற்போது இயக்குநர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா …
Read More »அனைவரது வாழ்விலும் நலங்களும் வளங்களும் பெருகட்டும்
அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும் என்றும், அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார். இந்த தீபாவளி திருநாள் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குவதாக …
Read More »“பிகில்” படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள படம் “பிகில்”.ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விவேக், இந்துஜா என நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான பிகில் படத்தின் ட்ரெய்லர் இந்திய படங்களில் அதிக லைக்குகள் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து இருதினங்களுக்கு முன்பு படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்து படம் U/A சான்றிதழ் பெற்றது. தீபாவளிக்கு இன்னும் …
Read More »48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக
அதிமுக என்ற சொல்லிற்கு இருக்கும் பலம் அளவற்றது என்று கூறினால் மிகையாகாது. இத்தகைய அதிமுக எப்படி உருவானது ? 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் சாதனைப் பயணத்தை சற்றே திரும்பி பார்க்கலாம். தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ம் தேதி, எம்.ஜி.ஆரால் புதுக்கட்சி தொடங்கப்பட்டது. அந்த கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை சூட்டினார் எம்.ஜி.ஆர். புதிய இயக்கத்தின் பெயரையும் …
Read More »தண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்
விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, குடிமராமத்து பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், திமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அவர் …
Read More »கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது!
கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப் பகுதிகள் தீக்கரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் சில்மார் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக வனப்பகுதியின் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பகுதிகள் எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டம் நிலவியதால் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதிக வெப்பம் காரணமாக தீ பற்றியிருக்க …
Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,404 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 13 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.24 அடியாகவும், நீர் இருப்பு 87.60 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு …
Read More »