வனிதா

வனிதா வம்புக்கு இழுத்தாலும் ‘நோ’ சண்டை – கஸ்தூரி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வனிதா வம்புக்கு இழுத்தாலும் நான் சண்டை போடமாட்டேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் கஸ்தூரி டீச்சராகவும், வனிதா விஜயகுமார் மாணவியாகவும் நடித்திருந்தனர். அப்போது கஸ்தூரி வாத்து பாடலை வனிதா பாடுவார் என்று கூற இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. இதையடுத்து அடுத்தடுத்த வாரங்களில் இருவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

நிகழ்ச்சியிலிருந்து இருவரும் வெளியேறியிருந்தாலும் மீண்டும் இவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று லாஸ்லியா குறித்து ட்வீட் செய்த நடிகை கஸ்தூரி, “என்னதான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா” என்று கூறி வாத்து எமோஜியுடன் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த வனிதா, உன்னைப்பற்றி விவரிக்க இணையத்தில் ஒரு எமோஜி கூட கிடைக்கவில்லை. அதனால் வெற்றிடமாக பதிவிடுகிறேன்” என்றார்.

இதைப்பார்த்த கஸ்தூரி, அன்பான வனிதா உன்னைப்போல் வார்த்தைகளைப் பயன்படுத்த இந்த இணையத்தாலேயே முடியவில்லை. இதில் வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்து உனக்காக நீயே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்” என்றார்.

இதையடுத்து கோபமடைந்த வனிதா, “இதற்கு மேல் பிக்பாஸ் தொடர்பான கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது ஒரு கேம் ஷோ மட்டுமே. நான் செய்தது எல்லாம் பொய்யான நாடகம். எனக்குப் போலி இல்லாத உண்மையான வாழ்க்கை இருக்கிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பதிலளித்த கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இதைத்தான் வனிதாவிடம் கூறினேன். இது ஒரு கேம் ஷோ, ஏன் தேவையில்லாத சண்டை, கோபம் என்று அவரிடம் கெஞ்சிக் கேட்டது எனக்கு நன்கு ஞாபகம் உள்ளது. ஆனால் இது ரியாலிட்டி ஷோ என்று கத்தினார். இப்போது போலி நாடகமா” என்று பதிவிட்டார்.

இப்படியே இந்த வார்த்தைப் போர் செல்ல கடுப்பான வனிதா, வாயை மூடு பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோதும் சரி, வெளியிலும் சரி. உனக்கு அறிவே கிடையாது. நல்ல விளைவுகளுக்காக உன்னை பிளாக் செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இருவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினர்களாக செல்கின்றனர். இதுகுறித்து ட்வீட் செய்த நடிகை கஸ்தூரி, “கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். மன்னிக்கவும் கன்டென்ட் இல்லை” என்று கூறியுள்ளார்.

https://twitter.com/KasthuriShankar/status/1178906818874986496

ஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …