யாரை நம்புவது

0
295
யாரை நம்புவது
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 26
    Shares

* யாரை நம்புவது…..***

இறைவன் படைத்தானே
இறக்கும் வரையிலே
இரக்கத்தோடு வாழ்ந்திடவே
இங்கே யாரை நம்புவது…….

பெண்ணாலே பிறந்தேனே
பெண்போற்றி வாழ்ந்தேனே
பொறாமைக்கு நடுவினிலே
பெருமையாய் யாரை நம்புவது……

பாசமான உறவுகளின்
பண்பில்லாத செயல்களினால்
பாவப்பட்ட உடன்பிறப்பாய்
பரிதாபத்தோடு யாரை நம்புவது……

காதலின் இனிமையிலே
களிப்பூட்டும் வேளையிலே
கண்கவரும் கள்வர்களில்
கண்ணியமாய் யாரை நம்புவது……

காதலிலே உண்மையாக
கள்ளத்தனம் இல்லாமலே
கனிவூட்டும் நினைவுகளை
காண்பதற்கு யாரை நம்புவது……

காசேதான் கடவுளென்று
கைப்பற்றி செல்பவர்களில்
கயவர்கள் யாரென்று
கவனமாய் யாரை நம்புவது……

யாரை நம்புவது 1

நீர்வேலி
கவிஞர் த. வினோத்..
யாழ்ப்பாணம்..