பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் கவின் நண்பர் கவினை அறைந்த விஷயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க freeze டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் போட்டியாளர்கள் பல்வேறு உறவினர்களும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர்.
அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் கவினை சந்தித்த கவினின் நண்பர் பீட்டர், இவ்வளவு கேவலமாக ஆடிய கேமிற்கும், மட்டமான நீ செய்த விஷயத்திற்கும், மற்றவர்களை நோகடித்தற்கும் உன்னை அறைய வேண்டும் என்று கவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.
இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.கவினை அறைந்த்தும் எந்த ஒரு பெரிய ரியாக்ஷனும் இல்லாமல் தனது உணர்வை கட்டுபடுத்தி அமர்ந்து கொண்டிருந்தார் லாஸ்லியா.
https://twitter.com/i/status/1172768722550841344
ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடாத unseen வீடியோவில் கவினை அறைந்து விட்டு லாஸ்லியாவிடம் பேசியுள்ளார் கவின் நண்பர் பீட்டர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள பீட்டர், கவினுக்கு அவனுடைய அம்மா வெளியே எப்படி இருக்கிறார் என்று தெரியாது.
ஆனால், அவர் மிகவும் நல்லவர், எனக்கும் அம்மா மாதிரி தான், இவன் செய்யும் சில வேலையால், அவனுடைய அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள், அது இவனால் தான், அதற்காக தான் அடித்தேன் என்றும் கூறியுள்ளார்.