இமயமலை

எனக்கும் காவிக்கும் செட் ஆகாது… ரஜினி ஓபன் டாக்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் , ஆனால் நான் அதில் மாட்ட மாட்டேன் என ரஜினிகாந்த் அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது.

இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.

இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் எனக்கும் காவிக்கும் செட் ஆகாது என அதிரடியாக பேசியுள்ளார்.

ரஜினி கூறியதாவது, என்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பாஜக் தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை.

திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்.

பேச வேண்டிய பல பிரச்சனைகள் இருக்கும் போது திருவள்ளுவரை சர்ச்சையாக்குவது அற்பத்தனமாக உள்ளது.

திருவள்ளுவர் நாத்திகர் இல்லை, ஆத்திகர். அவரது குறளை பார்த்தாலே இது தெரியும். அதேபோல உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என ரஜினிகாந்த பேசியுள்ளார்.

இதையும் பாருங்க :

சர்வதேச எழுச்சி நட்சத்திரம்! அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது

விரைவில் தொடங்குகிறது சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் அறிவிப்பு!

வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது!

வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது!

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …