புதிய போட்டியாளர் மீரா மிதுனை வச்சு செஞ்ச நால்வர் அணி!

0
24
பிக்பாஸ்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் போட்டியில் இருந்து ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை.

முதல் வாரம் என்பதால் இந்த வாரம் வெளியேற்றும் படலமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு புதிய போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வருகை தந்துள்ளார்.

மிரா மிதுனை பார்த்ததும் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். கவின் கட்டிப்பிடித்து அவரை வரவேற்றார்.

ஆனால் பெண் போட்டியாளர்களின் முகத்தில் ஒரு பொறாமை உணர்வு தெரிந்தது. குறிப்பாக சாக்சிக்கு ஏற்கனவே மிராமிதுன் குறித்து தெரிந்திருக்க வேண்டும்போல் தெரிகிறது.

மீரா மிதுனை ஒரு வெறுப்பு கலந்த பார்வையே பார்த்தார்.

மீரா மிதுனை அனைவரும் வரவேற்று கொண்டிருந்த நிலையில் சாக்சி, அபிராமி, ஷெரின் மற்றும் ரேஷ்மா ஆகிய நால்வர் மட்டும் உள்ளே சென்று மீராமிதுன் குறித்து புரணி பேசிக்கொண்டிருந்தனர். அவருக்கு பெட் இல்லை என்றும் ஆண்கள் பெட்ரூமுக்கு அவரை அனுப்பிவிடலாம் என்றும் ஆலோசனை செய்து வந்தனர்.

புதிய போட்டியாளர் மீரா மிதுனை வச்சு செஞ்ச நால்வர் அணி! 1

அதேபோல் பிக்பாஸ் வீட்டில் தன்னை சேர்த்து கொள்ளும்படி ஒவ்வொருவரிடமும் கேட்க மீராமிதுனுக்கு கவின் டாஸ்க் கொடுத்த நிலையில் அந்த டாஸ்க்கில் சாக்சி, அபிராமி, ஷெரின் மற்றும் ரேஷ்மா ஆகிய நால்வரும் அவரை வச்சு செஞ்சனர்.

எனக்கும் ஒரு நேரம் வரும் என மீராமிதுன் பதிலளித்துள்ளதால் அவர் பழிவாங்கும் நேரத்தை எதிர்நோக்கி காத்திருப்பார் போல் தெரிகிறது.

மொத்தத்தில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி காதல், ஏமாற்றம், பொறாமை என மனிதர்களுக்கே உரித்தான குணங்களுடன் முடிந்தது