கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்கார் படம் கடந்த ஆண்டு வெளியானது.அதன் பின் தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை.அக்டோபர் 17ம் தேதி இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை ஒட்டி இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட்க்கள் வெளியாகின. நாகேஷ் கூகுனூர் இயக்கத்தில் விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் தோற்றமளிக்கிறார்.மேலும் இந்த படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் …
Read More »“பிகில்” படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள படம் “பிகில்”.ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விவேக், இந்துஜா என நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான பிகில் படத்தின் ட்ரெய்லர் இந்திய படங்களில் அதிக லைக்குகள் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து இருதினங்களுக்கு முன்பு படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்து படம் U/A சான்றிதழ் பெற்றது. தீபாவளிக்கு இன்னும் …
Read More »48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக
அதிமுக என்ற சொல்லிற்கு இருக்கும் பலம் அளவற்றது என்று கூறினால் மிகையாகாது. இத்தகைய அதிமுக எப்படி உருவானது ? 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் சாதனைப் பயணத்தை சற்றே திரும்பி பார்க்கலாம். தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ம் தேதி, எம்.ஜி.ஆரால் புதுக்கட்சி தொடங்கப்பட்டது. அந்த கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை சூட்டினார் எம்.ஜி.ஆர். புதிய இயக்கத்தின் பெயரையும் …
Read More »தண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்
விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, குடிமராமத்து பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், திமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அவர் …
Read More »கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது!
கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப் பகுதிகள் தீக்கரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் சில்மார் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக வனப்பகுதியின் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பகுதிகள் எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டம் நிலவியதால் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதிக வெப்பம் காரணமாக தீ பற்றியிருக்க …
Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,404 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 13 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.24 அடியாகவும், நீர் இருப்பு 87.60 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு …
Read More »தமிழர்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிக்கிறது: சீன அதிபர்
தமிழக மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், தமிழக அரசின் சிறப்பான ஏற்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் மாமல்லபுரம் சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது இரண்டரை மணி நேரம் நீடித்த ஆலோசனையில் இருநாட்டு தலைவர்களும், பெருளாதாரம், வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து பேசியதாக …
Read More »பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி
பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா முதல் முறையாக வருகின்ற 21ஆம் தேதி 2 பெண் வீராங்கனைகளைக் கொண்டு விண்வெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அப்படி விண்வெளியில் தங்கியிருக்கும் போது விண்வெளி நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது பெரும்பாலும் …
Read More »பிக்பாஸ் 3 டைட்டிலை வெல்லப்போவது யார் ?
ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். நாட்கள் போக போக போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வந்தனர். முகேன் ticket to finale டாஸ்க்கில் வெற்றிப்பெற்று இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.பின்பு கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அதற்கு அடுத்து எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இன்று 104 வது நாளில் இறுதி போட்டியாளராக சாண்டி, முகென், ஷெரின் மற்றும் லாஸ்லியா …
Read More »ஆயுத பூஜையொட்டி 2வது நாளாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்
ஆயுத பூஜையொட்டி 2வது நாளாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வசிக்கும் மக்கள் ஆயுத பூஜை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக சிறப்பு பேருந்துகள் சேவை நேற்று தொடங்கியது. இந்தநிலையில், 2வது நாளாக 765 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. 4 நாட்கள் தொடர் விடுமுறை மக்கள் சொந்த ஊர் செல்ல அனைத்து ஏற்பாடுகளை போக்குவரத்து துறை செய்துள்ளது. தாம்பரம், …
Read More »