உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் கடந்த வாரம் கனமழை பெய்ததால் பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் கங்கை ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் …
Read More »5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான 5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச நிலையத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகின்றன. சுழற்சி முறையில் அங்கு வீரர்கள் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்கள், விண்கலன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான …
Read More »KTM நிறுவனத்தின் சக்திவாய்ந்த Duke பைக் வெளியீடு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் KTM நிறுவனம் புதிய 790 Duke பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது KTM Duke வரிசை பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் Duke வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக 790 Duke பைக்கை KTM நிறுவனம் களமிறக்கி உள்ளது. இந்தியாவில் KTM நிறுவனம் அறிமுகம் செய்யும் சக்திவாய்ந்த பைக் மாடல் என்பதுடன், முதல் இரட்டை சிலிண்டர் …
Read More »ஸ்லோவாகியா நாட்டில் முதல்முறையாக பெண் ஒருவர் அதிபராக தேர்வு
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவின் அதிபர் தேர்தல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. லிபரல் கட்சியைச் சேர்ந்த சூசானா கபுட்டோவா அதில் வெற்றி பெற்றதோடு, ஸ்லோவாகியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையையும், குறைந்த வயதில் அதாவது 45 வயதில் அதிபர் ஆனவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தனது சொந்த ஊரான பெஸிநாய்க் பகுதியில் நிலத்தில் நச்சுப்பொருட்கள் நிரப்பப்படுவதை எதிர்த்து மிகப் பெரும் சூழலியல் போராட்டத்தை …
Read More »உலகம் முழுவதும் ஞாபக மறதி நோயால் 40 லட்சம் பேர் பாதிப்பு
உலக ஞாபக மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுவோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றை காலக்கட்டத்தில் உணவு சமைப்பது முதல், சிறு சிறு கூட்டல் கணக்கு போடுவது வரை எல்லாமே இயந்திர வாழ்க்கையாகவிட்டது. மனிதன், தன் மூளைக்கு வேலை கொடுப்பது 5 முதல் 10 விழுக்காடு மட்டுமே என்று சொல்வார்கள். மூளைக்கு வேலையே கொடுக்காமல், …
Read More »நிறைய பேர் கேட்டும் லைவ்ல வரமுடியல..ஏன் தெரியுமா ? -உருகிய பிக்பாஸ் மதுமிதா
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சில பிரச்சனைகளால் வெளியேறிய மதுமிதா தனது தற்போதைய சூழ்நிலை குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்படி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி.100 நாட்கள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்படும்.ஜூன் 23ம் தேதி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலே வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.திடீரென …
Read More »ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் நயன்தாரா – எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் பிகில், தர்பார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் 65வது படத்தை இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது அந்த படத்திற்கு “நெற்றிக்கண்” என பெயரிடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் …
Read More »நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அதிமுக எம்.பி.க்கள்
நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு துறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுக்களை நியமித்துள்ளது. நீர்வளத்துறைக்கு மக்களவை உறுப்பினர்கள் 21பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10பேர் அடங்கிய நிலைக்குழுவை அமைத்துள்ளது. பாஜகவின் சஞ்சய் ஜெய்ஸ்வால் என்பவரைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.
Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த 40 பயங்கரவாதிகள், எல்லை தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் எனவும், நவீன ஆயுதங்களை …
Read More »