கவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா

0
60
கவின் - லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார்.

அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார்.
லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் கூறுகின்றார்.

கவினை லாஸ்லியா தவிர்த்து வரும் நிலையில் வேண்டுமென்றே கவினை லாஸ்லியாவுடன் கோர்த்து விட வனிதா சாக்சியை பயன்படுத்தி கொள்கிறார்.

இதனால் லாஸ்லியா டென்ஷனாகிறார். இதைத்தான் வனிதா எதிர்பார்த்தார், அவர் எதிர்பார்த்தது நடந்துவிட்டது
இந்த நிலையில் வனிதாவிடம் காண்பிக்க முடியாத கோபத்தை லாஸ்லியா கவினிடம் காண்பிக்கின்றார்.

இனிமேல் என்னோட நீ எப்பவுமே பேச வேண்டாம் என்று மனம் வெறுத்து கூறுகின்றார்.

கவினின் பிளேபாய் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருவதால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நாளும் நெருங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது

Bigg Boss Tamil

#Day18 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3

Posted by Vijay Television on Wednesday, 10 July 2019